அல்குர்ஆன் கூறும் சூராவளி எச்சரிக்கைகள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)

இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!

சூராவளி என்பது என்ன?

சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

சூராவளியின் வேகம்

பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.

சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.

சூராவளி டொர்னடோ எவ்வாறு உருவாகிறது

ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.

இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?

டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.

இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?

வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.

இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?

மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்

SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)

இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும்.  ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO (கஸ்டனாடோ சூராவளி)

இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு  மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.

WATERSPOUT (நீரில் ஏற்படும் சூராவளி)

வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான்.  இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.

DUST DEVILS

இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.

FIREWHIRLS

நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.

அல்லாஹ் அருள்மறையில் விவரிக்கும் சூராவளியின் தாக்கம் பற்றி மீண்டும் ஒருமுறை படித்து நல்லுணர்வு பெற முயலலாமே

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இந்த சூராவளிகளும் ஆதாரமாக திகழ்கிறது! எனவே இந்த உண்மைகளை அறிந்த நீங்கள் எப்போது இஸ்லாத்திற்குள் வருவீர்கள்!

அல்ஹம்துலில்லாஹ்

நன்றி:  இஸ்லாமிக் பரடைஸ் வோல்ட் பிரஸ் .காம்

Posted in Uncategorized | Leave a comment

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நம து உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே  உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:

நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity),

தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity)

இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.

அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த (Adaptive Immunity)இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது?

நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன. காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

நோய் எப்போது ஏற்படுகிறது?உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.

நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு காரணங்கள் என்ன?

நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:

1. பலகீனமான உடலமைப்பு

2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்

3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது

4. மது, போதைப்பொருள் பழக்கம்

5. புகைப்பழக்கம்

6. தூக்கமின்மை

7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது. கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.

காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.

நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்துகளா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌தீமை

ஆ‌ன்டி பயாடி‌க் என‌ப்படு‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளா‌ல், உட‌லி‌ல் உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி பா‌தி‌க்க‌ப்படுவது ந‌ம்‌மி‌ல் பலரு‌க்கு‌ம் தெ‌ரியாது. ஒரு செ‌ய‌‌ற்கையான ‌நிக‌‌ழ்‌வினா‌ல், உட‌லி‌ல் இய‌ற்கையாக உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி கு‌ன்று‌கிறது.

மேலு‌ம், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உ‌ட‌லி‌ன் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறையும்.

வாய் து‌ர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பிடுபவ‌ர்களு‌க்கு ஏற்படு‌கிறது.

சிலரு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பி‌ட்டது‌ம், உடலா‌ல் அதனை‌த் தா‌‌ங்‌கி‌க் கொ‌ள்ள இயலாத போது உட‌ல் நடு‌க்க‌ம் ஏ‌ற்படு‌கிறது.

மேலு‌ம், உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி எ‌ன்பதே இ‌ல்லாமலே‌ப் போ‌ய் ‌விடு‌ம் ஆப‌த்து‌ம் உ‌‌ள்ளது.

நன்றி: அம்மாதமிழ் .காம்

Posted in Uncategorized | Leave a comment

இறை நேசர்கள் (1)

மெய்யான இறை நேசச்செல்வர்கள் இறை நம்பிக்கையிலும், பக்தியிலும் தீர்க்கமானவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பயம் என்றும் அவர்களின் இதயங்களில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். அல்லாஹ் அல்லாத எவரையும் (அவர் நபியாகட்டும், வலியாகட்டும், ஜின்னாகட்டும்) அவர்கள் அஞ்ச மாட்டார்கள். அல்லாஹ்வின் பக்கம் மாத்திரமே இவர்கள் பக்தி செலுத்துவார்கள். உண்மைக்கு மாறாக ஷிர்க்வாத கருத்துகளுக்கு ஒருபோதும் இவர்கள் இசைய மாட்டார்கள். திருக்குர்ஆனையும், ஹதீஸையும் வைத்து துருவி ஆராய்ந்து இஸ்லாத்தில் உள்ளவற்றை மட்டும் எடுத்துச் செயல்படுவார்கள். இவர்களிடமிருந்து வெளிப்படுகின்ற (கராமத்) அற்புதச் செய்கை என்பது இறை நம்பிக்கை, இறைபக்தி போன்ற நல்ல குணங்களின் விளைவாகும். அன்றி பித்அத், ஷிர்க் போன்ற தீய குணங்களில் தம்மை ஈடுபடுத்துகிறவர்கள் எவரும் ஒருபோதும் கராமத்தை (அற்புதச் சாதனைகளை) வெளிப்படுத்த மாட்டார்கள். மக்கள் தமது இஷ்டப்படி மார்க்க விஷயத்தில் நடந்து கொள்ள முடியாதல்லவா? மாபெரும் அவ்லியாக்களின் வரலாறுகளைப் படித்தால் கண்ட மாதிரி, கண்ட இடங்களிலெல்லாம் தம் அற்புதச் செய்கைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் இன்று வரை குறிப்பிட்டதில்லை. மதச் சட்டங்களுக்குத் தகுந்த மேற்கோள் காட்டி எண்பிக்கப் படுவதற்கும், மதப் போதனைகளை நிரூபிக்க வேண்டிய நிலைகளும் உருவானால் மட்டுமே தம் கராமத்தினால் அவற்றை உறுதியான முறையில் விளக்கி மதத்தைக் கண்ணியப்படுத்திக் காட்டுவார்கள். முஸ்லிம்களுக்கு ஏதாவது தேவைகள் ஏற்பட்டாலும் கராமத்தைக் கொண்டு அவற்றைப் பூர்த்தி செய்து கொடுப்பவர்களும் உண்டு. சில வலிமார்கள் கராமத்தை ஹலால் (ஆகுமாக்கப்பட்ட வினை)களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆக எப்படியிருப்பினும் அனுமதியில்லா ஹறாமான பாவச் செயல்கள் புரிவதற்கு சாதகமாக ஒரு வலியுல்லாஹ் கூட தம் கராமத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. விலக்கப்பட்ட செயல்களில் கராமத்துகள் உபயோகிக்கப்பட்டால் அவை கராமத் என்றும் சொல்லப்பட மாட்டாது. மாறாக அவன் துரோகியாவான். அவனே அல்லாஹ்வின் பாவியுமாவான். தனக்கும், தன்னைச் சூழ்ந்திருப்பவர்களுக்கும் அநீதி இழைத்துக் கொண்டான். இஸ்லாத்தில் அத்துமீறியவன் என்றும், பாவியென இவனைப் பற்றிச் சொல்லப்பட வேண்டும். இஸ்லாமியரின் சமூகத்தில் வாழ்ந்து தன்னை மூமின் என்றும், ஈமானுக்குப் பாடுபடுகிறவன் என்றும் காட்டிக் கொண்டிருந்தாலும் இவனை விடக் கொடியவன் இருக்க முடியாது. அவ்லியாக்கள் தூய ஈமானிலும், தீர்க்க பக்தியாலும் அல்லாஹ்விடமிருந்து வெகுமதியாக கராமத்தைப் பெறுகின்றனர். எனவே இக் கராமத்தை ஒருபோதும் தீமைகளுக்கு பயன்படுத்த மாட்டார்கள். தீய செயல்களில் கராமத்தை உபயோகித்ததினால் அவை நன்மையாகத் திரும்பிவிடப் போவதுமில்லை. ஒரு முஸ்லிம் மத எதிரியோடு போராடினான் என்று வைத்துக் கொள்வோம். போராடியவன் வென்றான். எதிரியிடமிருந்து ஏராளம் கொள்ளைப் பொருட்கள் கிடைத்தது. அவற்றால் தன் பையை நிறைத்துக் கொண்டான். இப்போது மத எதிரியோடு போரடியவன் என்ற வகையில் இவன் சிறந்தவனென்பதில் ஐயமில்லை. இவன் பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டியவன். இவனுடைய செய்கையும் கௌரவிக்கத் தக்கதல்லவா? ஆனால் பின்னொரு முறை இந்த சூறைப் பொருட்களை வீணடித்து விட்டான். ஷைத்தானுக்குத் துணை செய்யும் காரியங்களில் இச்செல்வங்கள் அத்தனையையும் போக்கடித்தான். தன்னிஷ்டப்படி தீய நடவடிக்கைகளில் வினியோகித்தான். போராடிக் கிடைத்தப் பொருள் அத்தனையும் இவனுக்குக் கெடுதியாக அமைந்து விடுகிறது. பயனெதையுமே நல்கவில்லை. இப்படித்தான் கராமத்தும். அது கிடைக்க வேண்டுமானால் திடமான ஈமான் வேண்டும். இறையச்சம் மிகுதியாக உள்ளத்தில் குடிகொள்ள வேண்டும். மற்றும் எத்தனையெத்தனையோ நற்பண்புகள் வேண்டும். இவை நிரம்பிய ஜெயசீலர்கள் மட்டும் இந்தக் கராமத்துக்கு உரியவர்களாக ஆகிறார்கள். இப்படிக்கிடைத்த கராமத்தை ஒழுக்கக் கேடான செய்கைகளினால் இறைவனை நிராகரிக்கிற, மேலும் அவனுக்குக் குற்றம் புரிகிற, இன்னும் அவனுக்கு விருப்பமில்லாப் பாதைகளில் செலுத்தி பாவச் செயல்கள் புரிகிற செயல்களில் ஈடுபடுத்தினால் இவற்றைக் கராமத் என்று கூற முடியுமா? இதனால் வலிப்பட்டம் உள்ளதாகச் சொல்லப்படுபவன் பெரும் பாவியாக மாறிவிட வேண்டியது தானே வருகிறது. ஆகவே இம்மாதிரி முறைகேடான கராமத்தைப் பயன்படுத்தியவர்களில் பலர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாகவும், காஃபிர்களாக இறந்திருப்பதாகவும் அவர்களைச் சார்ந்தவர்களே ஏற்றிருக்கிறார்கள். இதைப்பற்றி விளக்கமாக வேறோரிடத்தில் பேசலாம். இணைவைத்த முஷ்ரிக்குகள் வழிகெட்டுப் போனதற்கான காரணங்களில் மிக முக்கியமானவை எவை என்றால் அவர்களின் பிம்பங்களின் அருகில் அவர்கள் கண்ட காட்சிகளும், கேட்ட குரல்களும் தான். இவையே இவர்களை ஷிர்க்கில்-இணைவைப்பில் உறைந்திருக்கத் தூண்டின. தர்ஹாக்களில் ஏதோதோ தொலைவிலுள்ள சம்பவங்கள் விளக்கப்படுகின்றன. சிறு சிறு தேவைகள் நிறைவேற்றப்படுவதும் உண்டு. கப்று வெடித்து பயங்கரமான அழகிய வடிவத்திலுள்ள ஒரு ஷைகு உதயமாகி, ஸியாரத்துக்குச் சென்றவனைக் கட்டியணைத்து ஸலாம் கொடுத்து ஏதோ அவனுக்கு விருப்பமான பேச்சுகளைப் பேசிவிட்டு மறைந்து விடுகிறார். இதனால் ஸியாரத்துக்குச் சென்றவனுக்கு நல்ல உறுதியாகி விட்டது. அதாவது: ‘கப்றில் அடக்கப்பட்டிருந்த நபி அல்லது அவ்லியாதான் வந்து வரம் கொடுத்து (முரீது வியாபாரம் நடத்தி) விட்டுப் போகிறார்’ என்று இதை நினைத்து நிம்மதியடைகிறான். பின்பு இச்சம்பவத்தின் வெளிச்சத்தில், திடமான ஷிர்க் வாழ்க்கையைத் தொடர்கிறான். கப்று மெய்யாக வெடிக்கவுமில்லை, பிளக்கவுமில்லை. தன் கண்களில் அப்படியொரு கண்கட்டு வித்தைக் காட்சியை ஷைத்தான் ஏற்படுத்தி விட்டு, இவனை நிலை குலையச் செய்தான். கப்று வெடித்து மனிதன் உதயமாகுவது போல சுவர்கள், பூமிகள் போன்றவையும் வெடிப்பதுண்டு. குறிப்பிட்ட சில இடங்களில் இந்தமாதிரி சம்பவங்கள் ஏராளம் நடந்திருக்கின்றன. இதைவிட ஆச்சரியமான செய்தி என்னவென்றால் சமாதியிலிருந்து ஊடுருவிப் பாய்கிற அவ்லியாக்கள், ஷைகுமார்கள் ஸியாரத்துக்கு வந்தவனிடம் ‘நாங்கள் இந்த சமாதிகளில் ஸ்திரப் பட்டிருப்பதில்லை’ என்று கூறுகிறார்கள். எந்த வேளையில் நாங்கள் புதைக்கப்பட்டோமோ அந்த வேளையிலிருந்தே நாங்கள் கப்றை விட்டு வெளியேறி விடுகிறோம். உயிருள்ள மக்கள் சமூகங்களுக்கிடையில் தான் நாங்கள் சுற்றித் திரிகிறோம். உங்களின் அன்றாடக் காரியங்கள் எல்லாவற்றிலும் நாங்கள் பங்கு பெறுவதுண்டு’ என்று கூறுவார்களாம். சிலர் மய்யித்தைப் புதைப்பதற்காகத் தூக்கிச் செல்லும் வழியில் இறந்த மய்யித்தும் சேர்ந்து தன் ஜனாஸாவை தூக்கிச் செல்வது போல் ஒரு கண்கட்டுக் காட்சியை கண்டிருக்கின்றனர். இதுபோல் எத்தனையோ சம்பவங்களைக் கூறிக்கொண்டே இருக்கலாம். வழிதவறிய சமூகம் இவற்றைக் கண்டதும் சிந்தனையின்றி அவ்லியாக்களின் கராமத்துகள் என்று பொய்யை எடுத்துக் கூறி மெய்பித்து விடுகிறது. என்றும் உயிருடனுள்ள அல்லாஹ்வை பயப்படுவதை விட்டும் நீங்கி, எப்போதோ இறந்து மடிந்த வலியைப் பயந்து நடக்கின்றனர். கப்றில் உதயமான மனிதனைப் பற்றி நபியென்றும், அவ்லியாவென்றும், ஷைகு என்றும் தீர்மானித்து விடுகின்றனர். மனித உருவத்தில் தோற்றமளித்தது மலக்கு என்றும் கூட சிலர் கூறக் கேட்டிருக்கிறோம். இதனால் இவர்களுக்குப் பயந்தும் நடக்கின்றனர். பயப்படாவிட்டால் தண்டனை கிடைக்குமென்ற நடுக்கம்! தாம் கண்டதைப் பற்றி கப்றாளியின் ரூஹானிய்யத் என்றும், அவருடைய சோற்றுச் சட்டி பிச்சைக் குடுக்கை என்றும், அவருடைய ‘ஸிர்ரு’ அந்தரங்க இரகசியங்கள் விஜயம் செய்திருக்கின்றன என்றெல்லாம் கூறி நம்பி விடுகின்றனர். ஒரே நேரத்தில் ஒரே தோற்றத்தில் இரண்டு இடங்களில் ஷைத்தான் காண்பித்துக் கொடுக்கிறான். பார்ப்பவர்கள் ஒரு வலியுல்லாஹ்வுக்கு ஒரே நேரத்தில் பற்பல இடங்களில் பிரதிபலிக்கும் சக்தியுண்டு என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர். மலக்குகளையும், காலஞ்சென்ற நபிமார்களையும் அழைப்பதற்காவும், இவர்களின் தர்ஹாக்களில் சென்று தம் தேவைகளை வேண்டுவதற்காகவும் புறப்படுபவர்கள் நிச்சயமாக முஷ்ரிக்குகளாவர். இத்தீவினையால் தம் ஈமானை வீணாக்கி விடுகிறார்கள். இவர்களும், கிரகங்களை வணங்கி வழிபடுகிறவர்களும், நட்சத்திரங்களையும் இதர கோளங்களையும் நோக்கிப் பிரார்த்திக்கின்ற மூட நம்பிக்கைக்காரர்களும் ஒரே சமத்துவத்தில் உள்ளவர்கள் என்று கூறலாம். அல்லாஹ் கூறுகின்றான்: “ஒரு மனிதனுக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் அருளிய பின்னர் அவர் மனிதர்களை நோக்கி அல்லாஹ்வையன்றி என்னையே வணங்குங்கள் என்று கூறுவதற்கில்லை. ஆனால் மனிதர்களை நோக்கி நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக (அதிலுள்ளவாறு) இறை (வன் ஒருவனையே வணங்கும்) அடியார்களாகி விடுங்கள் (என்றுதான் கூறுவார்). தவிர மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்களென்றும் அவர் கட்டளையிட மாட்டார். நீங்கள் முஸ்லிமானதின் பின்னர் நிராகரிக்கும்படி உங்களை ஏவுவாரா?” (3:79-80) இன்னும் அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) நீர் கூறும். அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்களிருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவற்றை (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள். அவ்வாறு அழைத்தால் அவை உங்களுடைய யாதொரு கஷ்டத்தையும் நீக்கி வைக்கவோ அல்லது அதனை தட்டி விடவோ சக்தியற்றவை (என்பதை அறிவீர்கள்). இவர்கள் (ஆண்டவன் என) அழைப்பவையும், தங்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் அமல்களைத் தேடுவதுடன் அவ்வமல்களைக் கொண்டு அல்லாஹ்வோடு மிக நெருங்கியவர் யார்? என்பதையும் தேடிக் கொண்டு அவனுடைய அருளை எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்கும் பயப்படுகின்றனர். ஏனென்றால் உம் இறைவனின் வேதனை நிச்சயமாகப் பயப்படக் கூடியதே”. (17:56-57) இன்னும் அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) நீர் கூறும். அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் தெய்வங்களென எண்ணிக் கொண்டீர்களோ அவற்றை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ பூமியிலோ அவற்றுக்கு அணுவளவும் அதிகாரம் இல்லை. அன்றி அ(வ்விரண்டில் எதிலும் அவற்றைப் படைப்ப)தில் இவற்றுக்கு எத்தகைய பங்குமில்லை. அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் ஒருவரும் இல்லை. அவனுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர மற்றெந்த மலக்கும் அவனிடம் பரிந்து பேசுவதும் பலனளிக்காது”. (34:22-23) இதைப்போன்ற கருத்துள்ள பல ஆயத்துகளை திருமறையில் காணமுடியும். அத்தனையுமே அல்லாஹ் அல்லாத இதர படைப்புகளிடம் பிரார்த்திப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. நாதாக்களானாலும் சரி, அவ்லியாக்களானாலும் சரி, யாரானாலும் அவர்கள் காலஞ்சென்று விட்டால் அவர்களிடம் சென்று துஆக்கள் வேண்டப்பட மாட்டாது. படைப்புகள் எவராயினும் அவர்களிடம் ஷபாஅத்துகள் தேடுவதும் தடுக்கப்பட்டுள்ளது. இவை ஷிர்க்கான அமல்களாகும். ஷிர்க்கின்பால் மனிதனை வேகமாகத் திருப்புகின்ற அபாயகரமான செயல்கள். ஆனால் பெரியோர்கள் வாழ்ந்திருக்கும் போது அவர்களிடம் சென்று ஷபாஅத்துக் கேட்கலாம். பிரார்த்தனை கேட்கலாம். இதற்கு அனுமதியுண்டு. இவர்கள் உயிரோடிருக்கையில் தேவைகள் எதுவானாலும் சரி அவற்றை நிறைவேற்றித் தரச் சொல்வது அனுமதிக்கப்பட்டதின் காரணம் என்னவென்றால், வாழ்ந்திருக்கும் நபியிடமும், வலியிடமும், ஒரு தேவையைக் கேட்டால் அது ஷிர்க்கில் மனிதனைச் சேர்த்து விடாது. இத்தகைய வேண்டுதலில் ஷிர்க் நுழைவதற்குரிய வாய்ப்புகளும் இல்லை. ஏனெனில் நபிமார்களின் வாழ்நாளில் அவர்களில் ஒருவர் கூட அல்லாஹ்வை வணங்குவது போலத் தம் கண்முன்னிலையில் வைத்துத் தன்னை வணங்கி வழிபடுவதை அனுமதிக்க வில்லையென்பது வரலாறு கூறும் உண்மை. அப்படி வேறு எவராகிலும் தம்மைக் கடவுளாக்க முனைந்தால் கூட நபிமார்கள் உடனே அதைத் தடுத்து விடுவார்கள். இது நபிமார்களின் குணங்களில் ஒன்று. ஸாலிஹான நன்மக்களில் எவரும் தான் வணங்கப்படுவதற்கு வாய்ப்புகள் அளிக்கவில்லை என்பதுவே உண்மை. இந்த ஆதாரங்களினால் உயிரோடு நடமாடும் ஒரு நபியையோ, வலியையோ, குருவையோ அணுகி அவரிடம் சிபாரிசைக் கேட்கலாம். உதவித் தேடி நிற்கலாம். அல்லாஹ்விடம் பிரார்த்திக்கச் சொல்லலாம். இதற்கெல்லாம் ஷரீஅத்தில் அனுமதி உண்டு. ஆனால் இவர்கள் காலஞ்சென்றதற்கப்பால் இவற்றுள் எதுவுமே அனுமதிக்கப்பட மாட்டாது. எந்த முஸ்லிமுக்கும் காலஞ் சென்ற நபியிடம் அவருடைய கப்றில் சென்று முறையிடுவதற்கும், பிரார்த்தனைகள் வேண்டுவதற்கும், உரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் தவறான செயலில் மனிதன் மூழ்கினால் அல்லது நபியின் சமாதியில் அவர்களை கண்ணியப்படுத்தி வணங்கி பித்அத்தான வேலைகள் அச்சமாதியில் நடத்தப்பட்டால் இவற்றைத் தடுத்து நிறுத்துகின்ற ஆற்றலும், வல்லமையும் இறந்துப் போன நபிமார்களுக்குக் கிடையாது. இதனால் மனிதன் ஷிர்க்கின் பக்கம் போய்ச்சேர்ந்து தன் ஈமானை வீணாக்கிக் கொள்கிறான். இறந்துபோன நபியிடம் சென்று பிரார்த்திப்பதால் இம்மாதிரியான நிலைமைகள் இவனுக்கு உருவாயின. இங்கேதான் இறந்தவர்களைப் பிரார்த்திக்கக் கூடாது என்ற அனுமதியின்மையின் மர்மம் வெளிப்படுகிறது. காலஞ்சென்ற ஒருவரைப் பிரார்த்தித்து தம் தேவைகளை முறையிடுவதும், எங்கோ தூரத் தொலைவில் இருப்பவரைக் கூப்பிட்டுத் தேவைகளை வேண்டுவதும் கூடாது என்பது என்ற விஷயத்தில் சமம்தான். மனிதன் ஒரு நபியை நேராகப் பார்த்தான் என்று வைத்துக் கொள்வோம். அல்லது ஒரு மலக்கை சந்தித்தான். எனக்காக துஆ செய்யுங்கள் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தான். இந்நேரம் இச்சொல் அவனை ஷிர்க்கில் சேர்த்து விடாது. ஆனால் எங்கோ ஒரு நல்ல மனிதர் அல்லது ஒரு நபி இருப்பதாக கேள்விப்பட்டதும் அவரை மனதில் நினைத்து தூரத்திலிருக்கின்ற அவரிடம் உரையாடுவது போல் நினைத்து எனக்காக துஆச் செய்யுங்கள் என்று தன் வேண்டுகோளை தெரிவித்தானென்றால் இச்செயல் கண்டிப்பாக அவனை ஷிர்க்கில் சேர்த்து வைக்கிறது. ஏனெனில் மய்யித்தாக இருப்பவரும், மறைமுகமாக இருப்பவரும் ஷிர்க்கான செயல்களை காணவும், கேட்கவும் முடியாதவர்களாக இருப்பதனால் இவற்றைச் செய்கிறவனைத் தடுக்க மாட்டார்கள். இத்தீய செயல் விலக்கப் படாமலேயே செய்யப்படுகிறது. இதனால் ஷிர்க்குகள் நாளொரு மேனியாக வளர்ந்து கொண்டே செல்கிறது. உயிருடனிருக்கையில் எந்த நபியும் தாம் வணங்கப்பட்டு தமக்காக சிரம் சாய்ப்பதை ஒருபோதும் விரும்பமாட்டார். ஷிர்க்கைக் கண்டால் உடனே அதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே வாழும் காலங்களில் மனிதன் நபியிடம் தம் தேவைகளைச் சொல்லிப் பிரார்த்திக்கும்படி வேண்டலாம். அதனால் தப்புகள் தலைதூக்கி விடுமோ என்ற ஐயப்பாடுகள் உண்டாக வழியில்லை. மய்யித்துகளிடம் தம் தேவைகளை வேண்டி நின்று இருகரமேந்திக் கெஞ்சிக் கேட்டு துஆக்களை அங்கீகரிக்கும் சக்தி அவற்றிற்கு உண்டு என இதயத்தால் விசுவாசித்து அவ்வாறு செயல்பட்டால் அதேவினாடியில் மனிதன் ஷிர்க்கின்பால் சேர்ந்து விடுகிறான். முஷ்ரிக்குகளும், வேதம் அருளப் பெற்ற வழிகெட்ட கூட்டத்தார்களும், அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்காரர்களான முஸ்லிம்களில் சிலரும் மார்க்கம் அனுமதிக்காத புதுமைச் செயல்களைச் செய்து தங்களை நேர்மையான நம்பிக்கையிலிருந்து திருப்பிக் கொண்டார்கள். நமக்கு துஆக் கேட்கும்படி நாமாகச் சென்று மலக்குகளிடம் முறையிடத் தேவைதான் என்ன? நன்மையை நாடி அவர்களாகவே சத்திய விசுவாசிகளுக்காக வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துப் பிழைபொறுக்கத் தேடுகிறார்கள். இவ்வுண்மையைத் திருமறை விளக்குகிறது: ‘அர்ஷைச் சுமந்திருப்பவர்களும், அதனைச் சூழ இருப்பவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதிச் செய்கிறார்கள், அவனை விசுவாசிக்கிறார்கள் விசுவாசம் கொண்டோரின் குற்றங்களை மன்னிக்கும் படியும் கோருகிறார்கள். “எங்கள் இறைவனே! நீ உன் ஞானத்தாலும், கருணையாலும் யாவற்றையும் சூழ்ந்தறிகிறாய். ஆகவே பாவங்களை விட்டு விலகி உனது வழியைப் பின்பற்றுவோருக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக! இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவனபதிகளில் அவர்களையும், அவர்களுடைய மூதாதையர்களிலும், மனைவியரிலும்,சந்ததிகளிலுமுள்ள நல்லோர்களையும் புகுத்துவாயாக. நிச்சயமாக நீயே யாவரையும் மிகைத்தோனும், யாவரையும் அறிந்த ஞானமுடையோனுமாயிருக்கிறாய். சகல தீங்குகளிலிருந்தும் அவர்களைக் காத்துக் கொள்வாயாக. அன்றையதினம் எவரை நீ சகல தீங்குகளிலிருந்தும் காத்துக் கொண்டாயோ அவர்மீது நிச்சயமாக நீ பேரருள் புரிந்து விட்டாய். இதுவே மகத்தான பெரும் பாக்கியமாகும்! (என்று பிரார்த்திக்கின்றனர்). (40:7-9) “மேலுள்ள வானங்கள் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (ஆனால்) மலக்குகள் (பயந்து) தங்களிறைவனைப் புகழ்ந்து துதிச் செய்து பூமியிலுள்ளவர்களின் குற்றங்களை மன்னிக்குமாறு கோரிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மன்னிப்போனும், கிருபையுடையோனுமாயிருக்கிறான் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். யார் அவனையன்றிப் (பிறரைத் தம்) பாதுகாவலராக எடுத்துக் கொண்டார்களோ அவர்களை அல்லாஹ் கவனித்தவனாக இருக்கிறான். (நபியே!) அவர்கள் மீது நீர் பொறுப்பாளரல்லர். (42:5-6) இத்திருமறை வசனங்களின் அடிப்படையில் பார்க்கும் போது மலக்குகள் மூமின்களுக்காகப் பிழைபொறுக்கத் தேடுகிறார்கள் என்பதை விளங்க முடிகிறது. விசுவாசிகள் மலக்குகளிடம் சென்று தம் தேவைகளை முறையிடாமல், மலக்குகள் தாமாக விசுவாசிகளுக்குப் பிரார்த்தனை செய்து வேண்டுகிறார்கள். ஆகவே நபியவர்களும், இதரநபிமார்கள், வலிமார்கள், நாதாக்கள் இவர்களைப் போன்ற பொதுநலம் கருதுகின்றவர்கள் அனைவரும் தம் சமூகத்தில் வாழும் நல்ல மக்களின் நலனை நாடிப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ்விடம் சிபாரிசும் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? நபிமார்களெல்லாம் தங்களுக்கு கட்டளையிடப் பட்டதையே செய்கிறவர்கள். செய்யக் கூடாதென்று விலக்கப்பட்ட எதையும் செய்ய மாட்டார்கள். இது நபித்துவத்தின் அடிப்படையாகும். இரண்டாவதாக: இன்னதைச் செய்ய வேண்டும். இன்னதைச் செய்யக் கூடாது என்று அவர்களைத் திருத்த மனித சமூகத்தால் முடியுமா? நபிமார்கள் தவறான செய்கையில் விழாமல் பாதுகாப்பளிக்கப் பட்டுள்ளார்கள். தமது சமூகத்துக்கு எப்போதும் நலவை நாடி அவர்களுக்கு எப்போதும் ஒத்தாசை புரிவார்கள். சமூகத்தை ஆதரிக்கும் எந்த மனிதனும் இது விஷயத்தில் நபிமார்களைப் போலிருக்க முடியாது. நபிமார்களிடம் தம் தேவைகளை முறையிட்டுப் பிரார்த்திக்கக் கோருவது ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட ஸுன்னத்தான செயல் என்றோ, வாஜிபான செயல் என்றோ யாரும் சொல்ல மாட்டார்கள். அது விலக்கப்பட்ட வினை. நபிமார்களும், வலிமார்களும் வாழ்ந்திருக்கையில் சமூக நலனை நாடி அவர்கள் துஆச் செய்தாலும், செய்யாமலிருந்தாலும் மனிதர்கள் அதைப்பற்றி சிந்திக்கத் தேவையில்லை. அல்லாஹ் அவர்களை நோக்கி எதைப் பணித்தானோ அதைத் தவிர இம்மியளவு கூட கூட்டியோ குறைத்தோ அவர்கள் செய்ய மாட்டார்கள். இதுவே அவர்களைப் பற்றிய நமது விசுவாசம். நபிமார்களிடம் (திடீரென்று) நமக்கு துஆச் செய்யக் கூறினால் நமது வேண்டுதலுக்கிணங்க உடனே துஆக் கேட்பார்கள் என்று என்ன நம்பிக்கை இருக்கிறது? நாம் துஆச் செய்ய வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் இது விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளை எதுவோ அதைத்தான் செய்வார்கள். துஆச் செய்யுங்கள் என்று நாம் வேண்டிய நேரத்தில் அவர்கள் மீதுள்ள அல்லாஹ்வின் விதி யாருக்கும் துஆ கேட்கக் கூடாது என்றிருக்குமானால் நமது வேண்டுதல் பலனளிக்காது. மாறாக நமக்குப் பிரார்த்திக்க அல்லாஹ் அவர்களைப் பணித்துள்ளான் என்று வைத்துக் கொள்வோம். நாம் நபியிடம் எதையும் முறையிட்டுக் கேட்கவுமில்லை என்றாலும் நமக்குத் தெரியாமல் நம் நாட்டங்கள் நிறைவேற்றப்படும். ஏனெனில் நபியவர்கள் அதற்காகப் பாடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறியவில்லை. சுருங்கக் கூறினால் காலஞ்சென்ற நபிமார்களிடமும், வலிமார்களிடமும் நமது எத்தேவையை வேண்டினாலும் அணுவளவும் பயனளிக்காது. மாறாக அது தீங்கான செய்கையின் பால் மனிதனை இழுத்துச் செல்லும். நபிமார்கள் உலகில் வாழும் போது அவர்களிடம் நம் தேவைகளை முறையிட்டு நமக்காகப் பிரார்த்திப்பதற்கும், சிபாரிசு செய்வதற்கும் வேண்டுவது கூட வாஜிபான அல்லது ஸுன்னத்தான அமல்களொன்றுமில்லை. ஆனால் அது ஷிர்க்கின் பக்கம் மனிதனைச் சேர்த்து விடாது. நபியிடம் நேராக ஆஜராகித் தேவைகளைக் கேட்கும் போது ஷிர்க் வருமென்று பயமேயில்லை. நன்மைகள் சில வேளைகளில் இரு தரப்பாருக்கும் கிடைக்கின்றன. நபிமார்கள் கூலி கொடுக்கப் படுவார்கள். நபியின் துஆவினால் தம் சமூகத்தின் தேவைகள் நிறைவேற்றப் படும்போது சமூகமும் துஆவினால் பயன் பெறுகிறது. ஆக இருதரப்பாரும் (மனிதனும், நபியும்) பலனடைகிறார்கள். ஆனால் முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். அசலில் படைப்புகளிடம் கேட்டல் என்பது தடுக்கப்பட்டுள்ளது. நபிமார்களின் பிரார்த்தனைகள் பலன் நல்கினாலும், நல்காவிட்டாலும் பொதுவாக சிருஷ்டிகளிடம் பிரார்த்தனை வேண்டுவது, உலகத் தேவைகளைக்கூறி துஆச் செய்யும்படி அவர்களைக் கேட்பது ஆகியவையெல்லாம் வாஜிப், ஸுன்னத் என்ற ஷரீஅத் சட்டங்களுக்கு உட்பட்டதல்ல. இது போற்றுவதற்குரியதும் அல்ல. நல்ல தரமான வேலையென்றும் சொல்லப்பட மாட்டாது. மனிதன் எந்நேரமும் எத்தேவைகளையும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டுமென்று தானே பணிக்கப்பட்டிருக்கிறான். ஹாஜத்துக்களையும் அல்லாஹ் ஒருவனிடமே முறையிட்டுக் கெஞ்ச வேண்டும். நம் முழு ஆதரவுகளையும் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் ஆதரவு வைக்க வேண்டும். எல்லாக் காரியங்களையும் அல்லாவிடம் பாரம்சாட்டி ஒப்படைத்து அவன் மீது ‘தவக்குல்’ வைக்க வேண்டும். சிருஷ்டிகளை நோக்கிக் கெஞ்சுவது அசலில் தடுக்கப்பட்டதும், விரும்பத்தகாததும், ஒழுக்கக் கேடானதுமான செயலாகும். இருப்பினும் கடும் சிக்கலான தேவைகள் நேர்ந்தால் மட்டும் உயிருடனிருக்கும் படைப்புகளிடம் அப்பிரச்சனைகளை முறையிடுவதற்கு ஒரு அனுமதியிருக்கிறது. ஆயினும் அதுபோற்றத் தகுந்த அனுமதியென்று கூறுவதற்கில்லை. மனிதனுக்கு எந்தச் சிக்கலான நிலைகள் உருவானாலும் அச்சிக்கல்களை சமாளித்து ஏதேனும் தக்க வழிகளில் அதை நிவர்த்தி செய்து அல்லாஹ்விடம் முறையிட்டு அவனிடமிருந்தே சர்வ பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இதுவே சிலாகிக்கத் தக்க மதிப்பான நடத்தையாகும். அல்லாஹ் கூறுகிறான்: “(உலக வேலைகளிலிருந்து) நீர் ஓய்வு பெற்றதும் வணக்கத்திற்குரிய தயாரிப்பை எடுத்துக் கொள்ளும். அன்றி (துன்பத்திலும், இன்பத்திலும்) உம் இறைவனை (ஆதரவு வைத்து அவனை) யே நோக்கி நிற்பீராக!” (94:7-8)

இறை நேசர்கள் (2)

வாழ்க்கையில் எப்படித்தான் சிக்கல்கள், துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தாலும் அவற்றிலிருந்து விடுதலை பெற அல்லாஹ் ஒருவனை மட்டும் நாட வேண்டும். எவரிடத்திலும் முஸ்லிம் தன் துயரங்களை முறையிடுதல் ஆகாது என்று குர்ஆன் விளக்கிக் காட்டுகிறது: “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றித் திருப்தியடைந்து ‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன், அல்லாஹ் தன் கிருபையைக் கொண்டு மேலும் அருள் புரிவான், அவனுடைய தூதரும் (அருள் புரியலாம்) நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்’ என அவர்கள் கூறியிருக்க வேண்டாமா?”. (9:59)

கொடுத்ததைப் பற்றிக் குறிப்பிடும்போது அல்லாஹ்வும் ரஸூலும் கொடுத்ததாகச் சொல்கிறான். அதே வேளையில் எவரைக் கொண்டு மக்கள் போதுமாக்கிக் கொள்ள வேண்டுமென்பது பற்றிக் குறிப்பிடுகையில் அல்லாஹ்வை மட்டும் குறிப்பிடுகிறான். தன்னுடன் ரஸுலையும் இணைத்து ‘அல்லாஹ்வும் ரஸூலும் நமக்குப் போதுமானவர்கள்’ என்று அவர்கள் கூற வேண்டாமா? என்று அல்லாஹ் சொல்லவில்லை. மக்களுக்கு மார்க்க நெறிகளை வழங்குவதில் அல்லாஹ் தன்னுடன் ரஸுலையும் சேர்த்துக் கூறுகிறான்: “(ஆகவே) நம்முடைய தூதர் உங்களுக்கு வகுத்துத் தந்த வழிமுறைகளை நீங்கள் மனமொத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனைக் கூடாதென்று தடுத்து விட்டாரோ அவற்றிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிடுகிறான். (59:7)

நற்செயல்களை ஏற்றுச் செயல்பட்டும் தீய செயல்களைத் தவிர்த்துக் கொண்டும் மக்கள் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்துவதைப் போல ரஸுலையும் திருப்திப் படுத்த வேண்டும். அல்லாஹ், ரஸூலின் முழு திருப்தியையும் மக்கள் நாடி நின்றனர். ஆனால் துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தால் யாரைக்கொண்டு மக்கள் போதுமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை விளக்கியபோது அல்லாஹ் தன்னை மட்டும் தான் கூறியிருக்கிறான். தன்னுடன் ரஸூலையும் சேர்த்துக் கூறவில்லை. மேலும் 9 : 59 வசனத்தின் இறுதியில் ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம் என்று அவர்கள் கூற வேண்டாமா? எனும் இடத்தில் அல்லாஹ்வுடன் ரஸூலும் சேர்த்துக் கூறப்படவில்லை. இதிலிருந்து மனிதன் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அஞ்சி ஒடுங்கிப் பயந்திட வேண்டுமென்பது புலனாகிறது.ஆனால் ரஸூலைப் பொறுத்தவரையில் மக்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களின் முன்மாதிரிகளை ஏற்க வேண்டும் என்பன போன்ற செயல்களில் மட்டுமே அல்லாஹ்வுடன் ரஸூலையும் சேர்த்துக் கூற முடியும். பயபக்திக்குரியவனும், அஞ்சி பயந்து நடக்க அருகதையுள்ளவனும், ஆதரவு வைக்கப் பட வேண்டியவனும் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான் இதில் நபிமார்களைச் சேர்க்க முடியாது.

இதுபற்றிப் பிறிதொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: “எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுக்கு மாறு செய்வதை அஞ்சிக் கொண்டிருக்கின்றாரோ அத்தகையவர்தாம் நிச்சயமாக மறுமையிலும் பாக்கியசாலிகள்” (24:52) இந்த ஆயத்தில் வழிப்படுவதை அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் சேர்க்கப் பட்டுள்ளது. பயப்படுவதையும், அஞ்சுவதையும் அல்லாஹ்வுடன் மட்டும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை அழைத்துக் கூறினார்கள்:

‘சிறுவரே! சில வார்த்தைகளை நான் உமக்குச் சொல்லித் தருகிறேன். அவற்றை நீர் செவி தாழ்த்திக் கேளும். அல்லாஹ்வை நீர் பேணிக் கொள்ளும். அவ்வாறெனின் அல்லாஹ் உமக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறான். அல்லாஹ்வை நீர் பயந்து நடந்தால் அவனை நீர் உமது சமீபத்தில் பெற முடியும். நீர் செழிப்பாக வாழும் காலங்களில் அல்லாஹ்வுக்கு உம்மை (உமது தாராள மனதை)க் காட்டி விடும். அப்படியென்றால் உமக்கு ஏற்படும் இக்கட்டான நிலைகளில் அவன் உமக்கு தனது தாராள குணத்தைக் காட்டித் தருவான். நீர் ஒன்றைத் தேவைப்பட்டு அதைப் பெற்றுக் கொள்ள நாடினால் அல்லாஹ்விடமே அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும். உதவி தேடினால் அல்லாஹ்விடம் மட்டும் உதவி தேடும். நீர் வாழ்நாளில் அனுபவிக்கப் போகும் அனைத்துக் காரியங்களைப் பற்றியும் திட்டவட்டமாக முன்னரே அல்லாஹ் எழுதி முடித்து விட்டான். ஆகவே உலகமே அணி திரண்டெழுந்து உமக்கு தீங்கிழைக்க முனைந்தாலும் இன்பம், துன்பம், நன்மை, தீமை இவ்விரு விதிகளில் அல்லாஹ் உமக்கு எழுதி நிர்ணயித்துள்ளானே அதைத் தவிர வேறு எதுவும் உமக்கு அனுகாது. ஆகவே உம்மால் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்தும் வண்ணம் ஏதேனும் வழிபாடுகளை தீர்க்கமான இறை விசுவாசத்துடன் செய்ய முடியுமானால் செய்யும். உம்மால் அவற்றைச் செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை. நிலை குழைந்து விடாதீர். மனம் வெறுக்கின்ற செயல்கள் மீது நீர் பொறுமையை மேற்கொள்ளும். அப்பொறுமையில் பற்பல நன்மைகள் இருக்கின்றன. இது இப்னு அப்பாஸ் அவர்களைப் பற்றி நன்கறியப்பட்ட பிரபலமான ஹதீஸாகும். சமயங்களில் சுருக்கமான முறையில் அறிவிக்கப் படுவதுண்டு.

நபியவர்கள் இந்த ஹதீஸில் இப்னு அப்பாஸை நோக்கி ‘தேவைகளை நீர் அல்லாஹ்விடமே கேட்டுப் பெற வேண்டும். உதவி தேடினால் அல்லாஹ்விடம் மட்டும் உதவி தேடும்’ என்று ஏவியிருப்பது இப்னு அப்பாஸைப் பற்றி அறிவிக்கப்படுகின்ற ஹதீஸ்களிலே மிகத் தெளிவாக பலம் குன்றாத (ஸஹீஹான) ஹதீஸாக அறிவிக்கப்படுகிறது. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் முஸ்னத் என்ற ஹதீஸ் தொகுப்பில் ஒரு சம்பவம் வருகிறது: கலீபா அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களின் கரத்திலிருந்த சாட்டை ஒருமுறை கீழே விழுந்து விடுகிறது. இத்தருணத்தில் அந்தச் சாட்டையை எடுத்து தாருங்கள் என்று கூட யாரிடத்திலும் அவர் கெஞ்சி நிற்கவில்லை. அவர்களாகவே அதை எடுத்தார்கள். அது மட்டுமல்ல, என் ஆருயிர்த் தோழர் நபி (ஸல்) அவர்கள் ‘எதையும் மனிதர்களிடம் கேட்காதே’ என்று என்னைப் பணித்துள்ளார்கள் என்றும் இதற்கு விளக்கம் கொடுத்தார்கள்.

இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களுடைய ஸஹீஹான ஹதீஸுத் தொகுப்பில் அவ்ஃப் பின் மாலிக் என்பார் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸில் அவ்ஃப் பின் மாலிக் அவர்கள் கூறுகிறார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் ஒரு சாராரிடம் ஒப்பந்தம் செய்து கொண்ட பொழுது கீழ்வருகிற சில வாக்கியங்களையும் ஸஹாபாக்களிடம் மறைமுகமாகச் சொல்லிக் கொடுத்தார்கள். அது ‘மக்களிடம் எதையும் கேட்க வேண்டாம்’ என்பதுதான். மேலும் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஸஹாபாக்களில் சிலர் சாட்டை போன்றவை தம் கையை விட்டும் கீழே விழுந்தால் கூட பிறரிடம் ‘அதை எடுத்துத் தாரும்’ என்று கேட்டதில்லை.

இமாம் புகாரியுடையவும், முஸ்லிமுடையவும் ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் வருகின்ற ஒரு ஹதீஸில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என் சமுதாயத்திலுள்ளவர்களில் எழுபதினாயிரம் மக்கள் கேள்வி கணக்கின்றி சுவனத்தில் புகுவார்கள்’. இது பற்றி மேலும் நபிகள் விளக்கம் தருகையில் கூறினார்கள்: ‘அவர்கள் ஓதிப் பார்க்க பிறரிடம் வேண்டிக் கொள்ளாதவர்கள். சூடுபோட்டு சிகிச்சை செய்யாதவர்கள். அவர்கள் துர்ச்சகுனம் பார்ப்பவர்களாகவும் இருந்ததில்லை. தம் இரட்சகன் அல்லாஹ்வின் மீது தன் காரியங்களை பாரம் சாட்டி ஒப்படைத்திருந்தனர்’ என்று கூறினார்கள். கேள்வி-கணக்கின்றி சுவர்க்கத்தில் நுழைபவர்களின் தன்மைகளைப் பற்றிப் பாராட்டி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் பொழுது ‘அவர்கள் ஓதிப் பார்க்க யாரிடமும் வேண்டிக் கொள்ள மாட்டார்கள்’ என்று விளக்கம் தருகிறார்கள். திருமறையைக் கொண்டும், அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களைக் கொண்டும் ஓதிப் பார்த்தல் என்பது அனுமதிக்கப்பட்ட பிரார்த்தனைகளின் இனத்தைச் சார்ந்ததாக இருந்தும் அவர்கள் அதைக் கூட பிறரிடம் கெஞ்சிச் செய்ய மாட்டார்கள் என்று பாராட்டப் படுகிறார்கள். மனிதன் பிறரிடம் ஒதிப் பார்க்க போவதைக் காட்டிலும் தனக்குத் தானாவே ஒதிப் பார்ப்பதும், மற்றவர்கள் சொல்லாமல் தாமாக உணர்ந்து பிறருக்கு ஓதிப் பார்ப்பதும் மார்க்கத்தில் விரும்பத்தக்க செயலாகும். நபி (ஸல்) அவர்கள் தமக்குத் தாமாக ஓதிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் யாரிடத்திலும் தமக்கு ஓதிப் பார்க்க வேண்டிக் கொள்ளவில்லை.

நபிகள் (ஸல்) தமக்காகவும், பிறருக்காகவும் ஓதிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் யார் தமக்கு ஓதிப் பார்க்க வேண்டிக் கொள்ளவில்லை.

மனிதர்கள் தமக்காகவும் பிறருக்காகவும் ஓதிப் பார்ப்பதெல்லாம் பிரார்த்தனைப் புரிவதற்குச் சமமாகும். தமக்கும், பிறருக்கும் பிரார்த்திப்பது போன்றொரு அமல்தான் ஓதிப் பார்ப்பதும். அத்துடன் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஓதிப்பார்த்தல் திருமறையைக் கொண்டும், இறைவனின் அழகிய திருநாமங்களைக் கொண்டும் இருத்தல் வேண்டும். வேறுஏதேனும் (மந்திரித்தல்) செய்தால் அது முழு ஹறாமான செயலாக மதிக்கப்படுகிறது. நபியவர்கள் தமக்காக ஓதிப்பார்த்தல் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதற்குச் சமம். இதைப் பிறருக்காகச் செய்தால் பிறருக்காகப் பிரார்த்தித்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். நபிகள் மட்டுமல்ல, அனைத்து நபிமார்களுமே அல்லாஹ்விடத்தில் தமக்காகவும், பிறருக்காகவும் பிரார்த்தனைகள் நடத்திப் பற்பல தேவைகளை அவனிடம் கேட்டிருக்கிறார்கள். பல தேவைகளை அவனிடமிருந்து பிறருக்காகச் சாதித்துக் கொடுத்துமிருக்கிறார்கள். நபிமார்களான ஆதம், இப்ராஹீம், மூஸா (அலை) போன்ற மற்றும் இறை தூதர்களின் வரலாற்றில் அல்லாஹ் இதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

இப்னு அப்பாஸ் அறிவிக்கும் ஸஹீஹான ஹதீஸில் கூறப்படுகிறது: ‘நம்ரூத் இப்ராஹீம் நபியைத் தூக்கி நெருப்புக் கிடங்கில் எறிந்தபோது உடனே ஜிப்ரீல் வருகைத் தந்து கூறினார்கள். ‘இப்ராஹீமே! உம் தேவையைக் கேளும்’ உடனே இப்ராஹீம் நபியவர்கள் ‘அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனிடம் நான் எல்லாக் காரியங்களையும் ஒப்படைத்து விட்டேன். பாரம்சாட்டி ஒப்படைக்கக் கூடியவர்களில் அவனே சிறந்தவன் -ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வகீல்- என கூறினார்கள். சிலர் பெருமானாரிடம் வந்து ‘நபியே! தாங்களுக்கெதிராக யுத்தம் புரிய சகல மனிதர்களும் நிச்சயமாகத் திரண்டு நிற்கின்றனர். ஆகவே அவர்களை பயப்படுங்கள்’ என்று கூறியபோது, நபியவர்களும் ‘ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வகீல்’ எனக் கூறித்தான் தமக்குத் தாமே பாதுகாப்புத் தேடிக் கொண்டார்கள்.

இப்படியாகவே அனைத்து நபிமார்களும் தமக்காக அல்லாஹ்விடம் மட்டும் பாதுகாப்புக் கேட்டு நின்றார்கள். வேறு யாரிடமும் எதையும் கேட்கவில்லை. கஷ்டங்களை விட்டு நீங்கவும், துன்பங்களிலிருந்து விடுபடவும் தாமாகவே துஆக்களை இறைஞ்சி துன்பங்களிலிருந்து விலகிக் கொண்டனர். யாரிடமும் அவர்கள் எதைப் பற்றியும் முறையிடவில்லை. ஜிப்ரீலிடம் கூட எதையும் வேண்டிக் கொள்ளவில்லையென்றால் வேறு எந்தப் படைப்புகளிடம்தான் கேட்கப் போகிறார்கள். ஒரு நாள் ஜிப்ரீல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘நபியே! தாங்களுக்கு ஏதாவது தேவைகள் இருக்கின்றனவா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலை நோக்கி ‘உங்களிடம் எனக்கு எத்தேவையுமில்லை’ என்று பதில் கொடுத்தார்கள். இச்சம்பவத்தை இமாம் அஹ்மதும் மற்றவர்களும் அறிவிக்கிறார்கள்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட வேளையில் அல்லாஹ்விடம் பிரார்த்தித்து அதிலிருந்து விடுதலைப் பெற்ற சம்பவத்தை வேறு இடங்களில் திருமறை குறிப்பிடுகிறது. அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது ஜிப்ரீல் விஜயம் செய்தார்கள். ‘இப்ராஹீமே! உமக்கு இப்பொழுது என்ன தேவையோ அதை அல்லாஹ்விடம் கேளும் என்று பணித்தார்கள். அதற்கு இப்ராஹீம் நபியவர்கள் ‘நான் ஏன் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். என்னைப் பற்றி அல்லாஹ் தெரிந்திருப்பதே எனக்குப் போதுமானது. நான் ஒன்றும் அவனிடம் கேட்கத் தேவையில்லை’ (ஹஸ்பீ மின் ஸுஆலி இல்முஹு பி ஹாலி) என்று நபி இப்ராஹீம் (அலை) ஜிப்ரீலிடம் கூறியதாகச் சொல்லப்படும் சம்பவம் ஆதாரமற்றதாகும். இதை மெய்யான சம்பவம் என்று குறிப்பிட முடியாது. மாறாக இப்ராஹீம் (அலை) அவர்கள் இவ்வேளையில் ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வகீல் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இது இப்னு அப்பாஸ் மூலம் அறிவிக்கப்படும் ஸஹீஹான ஹதீஸில் காணப்படுகிறது. நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஜிப்ரீலிடம் ‘நான் ஏன் இறைவனிடம் கேட்க வேண்டும்?’ என்று எப்படிப் புறக்கணித்துக் கூறுவார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறான். சிருஷ்டிகளின் ஒவ்வொரு நிலைமையையும் அறிந்திருக்கிறான். அத்துடன் தன்னை வணங்க வேண்டுமென்றும் அவற்றைப் பணித்திருக்கிறான். தன்மீது எல்லா அடிமைகளும் தத்தம் காரியங்களைப் பாரம் சாட்டி ஒப்படைத்து விட்டுத் தேவைகள் அனைத்தையும் அவனிடமே கேட்க வேண்டுமென்றும் பணித்திருக்கிறான்.

ஆம்! இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம். இக்காரணங்களினால் சகல காரியங்களும் உண்டாகின்றன. காரணங்களைக் கொண்டு காரியங்கள் நிறைவேறும் அமைப்பில் விஷயங்களை அல்லாஹ் அமைத்திருக்கிறான். எனவே வணங்கி வழிபடும் நன்மைகளுக்குரிய கூலி கொடுத்தல் என்று ஒருகாரியம் உண்டாவதற்கு வணங்க வேண்டுமென்ற காரணத்தை அமைத்துள்ளான். ஆக வணக்கம், வழிபாடு என்ற காரணங்களிருந்தால் கூலி கொடுக்கப்படும் என்ற காரியம் நிறைவேறுகிறது. இதைப் போன்றுதான் துஆக்களின் நிலைமையும். அங்கீகரிக்கப்படல் என்ற காரியம் உண்டாவதற்கு இறைவனிடம் கெஞ்சிக் கேட்டல் என்ற காரணம் இருக்க வேண்டும். அல்லாஹ் அனைத்தையும் முறைபோல் அறிந்திருக்கிறான் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. யார் என்ன தேவைக்குரியவன்? எது யாருக்கு வேண்டும்? பாவி யார்? கொடிய பாவி யார்? என்பன போன்றவற்றை விளக்கமாகவும், துல்லியமாகவும் அறிந்திருக்கிறான். இத்தகைய அல்லாஹ்வுக்கு மனிதன் தன்னிடம் துஆக் கேட்க வேண்டுமென்று பணிப்பதில் என்ன குறைபாடு வரப்போகிறது? பாவம் செய்கிறவனை நன்றாக அறிந்திருந்தும் அவனை நோக்கி ‘நீ பிரார்த்தித்து என்னிடம் பாவமன்னிப்பை வேண்டு’ என்று பணிப்பதில் எந்தக் குறையும் அல்லாஹ்வுக்கு இல்லை.

இதைப் போன்றுதான் நபி இப்ராஹீமின் நிலைமையும். நெருப்புக் குண்டத்தில் தூக்கி வீசப்பட்ட போது அவர்களின் நிலைமைகளை அல்லாஹ் நன்றாக தெரிந்திருந்தான். இதனால் அவர்கள அல்லாஹ்விடம் பிரார்த்திக்காமலிருக்க என்ன வந்து விட்டது? எனவே நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தைகள் ஆதாரமற்றவையாகும். ஆனால் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். துஆக்களை விட சிலவேளை சில திக்ருகளுக்கு (தியானங்களுக்கு) அதிகமான மதிப்புகள் கொடுக்கப்படுகின்றன. மனிதன் இதுபோன்ற திக்ருகளை ஓதினால் துஆக் கேட்பவனுக்குக் கிடைக்கும் ஆதாயத்தை விட அதிகமான ஆதாயத்தையும், வெகுமதிகளையும் இந்த திக்ருகளை மொழிந்ததினால் பெறுகிறான். ஆனால் திக்ருகள் ஓதி துஆவின் பலனைப் பெறுவதெல்லாம் மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் மட்டும்தான். ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதை நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்: ‘அல்லாஹ் கூறினான்: ‘என்னிடம் எதையும் கேட்காது என்னைத் தியானிப்பதிலேயே ஒருவன் நேரத்தைக் கழித்தால் துஆக் கேட்பவர்களுக்கு அளிக்கப்படும் ஆதாயத்தை விட சிறந்த ஆதாயத்தையும், வெகுமதியையும் அளித்து அவனைக் கௌரவிப்பேன்’. இன்னுமோர் ஹதீஸ் குத்ஸியில் நபியவர்கள் கூறினார்கள்:

‘அல்லாஹ் சொல்கிறான்: ‘என்னிடம் பிரார்த்திக்காமலும், என்னை திக்ரு செய்யாமலும் எவர் திருமறை ஓதுவதில் மட்டும் பராக்காயிருக்கிறாரோ அவருக்கு துஆக் கேட்பவர்களுக்குக் கொடுக்கப்படும் வெகுமதியைக் காட்டிலும் சிறந்த வெகுமதியையும், ஆதாயத்தையும் நான் கொடுப்பேன்’. இதை இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தமது ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

thans to :

(  Jafar Ali – Kuwait)  (May 18th, 2005)

Posted in Uncategorized | Leave a comment

எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள் நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும். ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் சிலருக்குகவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும். அல்லது ஒருவருக்கு இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கவும் செய்யும். இதை வைத்து அந்த நாளை நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ கூறிவிட முடியாது. இவ்வுலகம் சோதனைக் கூடமாகும். மரணிக்கும் வரை ஒவ்வொரு மனிதனும் பல விதமான சோதனைகளைக் கொண்டு சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பான். சோதனைகள் வரும்போது அதை ஒரு முஸ்லிம் பொறுத்துக் கொள்ளவும் பொருந்திக் கொள்ளவும் வேண்டும். அது அவனுடைய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இப்படி ஈமான் கொள்வது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும்.

அல்லாஹ்வையும் வானவர்களையும் நபிமார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

ஆகவே நமக்கு நடக்கக்கூடிய நல்ல கெட்ட காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் நம்மீது விதித்த விதியின்படியே நடக்கின்றதென்று நம்ப வேண்டுமே தவிர, இன்று கெட்ட நாள், இதனால்தான் எனக்கு இந்த ஆபத்து நடந்ததென்று கூறுவது மூட நம்பிக்கையும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய ஒன்றாகும்.

சோதனையின்றி வாழ்வில்லை

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஃமினான ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்) அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும் அவர்களின் பிள்ளைகள் விஷயத்திலும் அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும். ஆதாரம்: திர்மிதி

ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது

ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இது அல்லாஹ்வின் ஏற்பாட்டினால் தான் (களா கத்ரினால்தான்) ஏற்பட்டதென்றும், நான் பிறப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இது எழுதப்பட்டு முடிந்து விட்டதென்றும் இது நடக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லையென்றும் நம்பாத வரை அவர்கள் உண்மையான முஃமினாக முடியாது.

இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இப்னு உமரின் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! களாகத்ரை (விதியை) ஈமான் கொள்ளாதவர், உஹது மலை அளவு தங்கத்தை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான் எனக்கூறி, இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை கூறினார்கள். அல்லாஹ்வையும் வானவர்களையும் ரஸுல்மார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

உபாதா பின் சாமித்(ரலி) அவர்கள் தன் மகனைப்பார்த்து, மகனே! உனக்கு ஏற்படுகிற துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உனக்கு வராமல் போய்விடாது என்ற உண்மையையும், உனக்கு ஏற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உனக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையும் நீ அறிந்து கொள்ளாதவரை நிச்சயமாக நீ உண்மையான ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்ளமாட்டாய் எனக்கூறி, பின்வரும் ஹதீஸையும் எடுத்துக் கூறினார்கள்.

அல்லாஹ் எழுது கோலை முதலில் படைத்து நீ எழுது எனக் கட்டளையிட, எதை எழுத வேண்டும் என அது கேட்க, இறுதிநாள் வரைக்கும் எல்லாவற்றிற்கும் உண்டான விதிகளை எழுது என அல்லாஹ் கட்டளையிட்டான், என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் எனக் கூறி, மகனே! இவ்வாறு விதியை நம்பாது ஒருவர் மரணித்து விடுவாராயின் அவர் என்னை சார்ந்தவரல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனவும் எடுத்துரைத்தார்கள். ஆதாரம்: அஹ்மத்

இப்னு அபூதைலமீ அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் உபை பின் கஃபை அணுகி, என் உள்ளத்தில் விதியைப்பற்றி சிறிது சந்தேகம் உள்ளது. அதை நீக்குவதற்கு ஏதாவது சொல்லித்தாருங்கள். அல்லாஹ் அந்த சந்தேகத்தை போக்கிவிடுவான் என்று கூறினேன். அதற்கு உபை பின் கஃபு(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். (இப்னு அபூ தைலமியே!) நிச்சயமாக உமக்கு ஏற்படும் துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உமக்கு வராமல் போகாது எண்ற உண்மையையும், உமக்கு எற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உமக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையம் அறிந்து, களா கத்ரைக் கொண்டு நீர் ஈமான் கொள்ளாதவரை உஹது மலை அளவு தங்கத்தை செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். இவ்வாறு நீர் களாகத்ரைக் கொண்டு ஈமான் கொள்ளாது மரணித்துவிட்டால் நீர் நரகவாசிகளில் ஒருவரே என்றார்கள். பின்பு நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களிடமும் ஹுஸைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்களிடமும் வந்தேன். இவர்கள் எல்லோரும் இது போலவே நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்.
ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்

சோதனை வருவது அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் நேசத்தையே வெளிக்காட்டுகின்றது.

அல்லாஹ் தன் அடியாருக்கு நலவை நாடினால் இவ்வுலகிலேயே தண்டனை (சோதனை)யை வழங்குகின்றான். அல்லாஹ் தன் அடியாருக்கு கெடுதியை நாடினால் மறுமையில் தண்டனையை முழுமையாக வழங்குவதற்காக இவ்வுலகில் எவ்வித தண்டனையும் (சோதனையும்) வழங்குவதில்லை, அதிக சோதனையுடன்தான் அதிக கூலியும் கிடைக்கும், அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். அதை யார் பொருந்திக் கொள்கின்றார்களோ அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கின்றது, யார் அதை கோபிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் கோபம் கிடைக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி

ஸஃபர் மாதமும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதம்தான்

சோதனைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது என நம்ப வேண்டிய ஒரு முஸ்லிம், ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையயை களிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன் கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து இன்னும் இது போன்ற பல சடங்குகளையும் செய்து அந்தப்பீடையை போக்கவேண்டும் என்று எண்ணி பல சடங்கு சம்ரிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் நமது இஸ்லாமிய பல சகோதர சகோதரிகள் செய்கின்றார்கள். இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூட நம்பிக்கையுமாகும். இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கைகளை விட்டுவிட்டு அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்று நம்ப வேண்டும். ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறை வசனமோ நபி மொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதை தடுக்கும் நபிமொழியைத்தான் பார்க்க முடியும்.

இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை, துர்ச்சகுணம் பார்ப்பது கூடாது, ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது, சஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுணம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

ஸஃபர் மாதத்தை பீடையுள்ள மாதம் என்பதற்கு, இந்த மூட நம்பிக்கையுள்ளவர்கள் கூறும் காரணம், நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில் நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்தது போல், நாமும் பீடையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான வாதமாகும். நோயுறுவது பீடையா? முன்பு கூறியது போன்று இது அல்லாஹ்வின் விதிப்படி நடந்ததென்று ஒரு முஸ்லிம் நம்ம வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள், ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள், இதை யாரும் மறுக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல் மரணித்தார்கள், அந்த நாளை யாராவது பீடையுள்ள மாதம் என்று கூறுகின்றார்களா? அதை கொண்டாடும் நாளாக அல்லவா? எடுக்கின்றார்கள். நமக்குள் நாமே முரண்படுகின்றோம்.

ஆகவே ஸஃபர் மாதத்தையும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதமாக நினைத்து நமது அன்றாட காரியங்களை செய்ய வேண்டும். ஸஃபர் மாதத்தில் ஏதும் சோதனைகள் வந்தால்கூட அது ஸஃபர் மாத்தினால் ஏற்படவில்லை, அல்லாஹ்வின் ஏற்பாட்டினால்தான் வந்தது என்று நம்ப வேண்டும். இப்படிபட்ட உறுதியான ஈமானை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

நன்றி:   மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ  அவர்களுக்கு

Posted in Uncategorized | Leave a comment

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: –

“மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13)

இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் பிறருக்குச் சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம்மைப் படைத்த இறைவனான அல்லாஹ் மடடும் நாம் வெளிப்படையாக பேசுவதையும், நம் இதயங்களில் மறைத்து வைத்துள்ள இரகசியங்களையும் அறிவான். இந்தப் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மடடுமே உரியது.

எவரேனும் ஒருவர் மற்றவரின் இதயத்தில் உள்ள இரகசியங்களை அல்லாஹ்வைத்தவிர இறைநேசரோ, அவுலியாவோ, மற்றவர்களோ அறிந்துக் கொள்ள முடியும் என்று நம்பினால் அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் ஆற்றலாகிய இதயங்களில் உள்ள இரகசியத்தை அறியும் தன்மை அல்லாஹ் அல்லாதவருக்கு இருப்பதாக கருதுவதாகும். இதற்கு ஒரு உதாரணம் காண்போம்: –

ஒருவர் மலேசியாவில் இருந்துக் கொண்டு தம் மனதிற்குள், தம்முடைய ஒரு தேவையை நாகூரில் அடக்கமாகியிருக்கும் சாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தந்தால் அந்த அவுலியாவுக்கு காணிக்கை செலுத்துவேன் என்று நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம். இங்கே இவர் இரண்டு விதமான ஷிர்க்கைச் (இணை வைத்தலைச்) செய்தவராகிறார்.

ஒன்று அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சை என்ற வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர மற்றவரிடத்தில் செய்வது

இரண்டாவது மலேசியாவில் இருக்கும் அவருடைய மனதில் உள்ள இரகசியங்களை  அல்லது தேவைகளை அல்லாஹ்வுக்கு தெரிவதோடு மட்டுமல்லாமல் நாகூரில் இருக்கும் சாகுல் ஹமீது அவுலியாவுக்கும் தெரிகிறது என்று நம்புவது.

மேற்கண்ட இரண்டு நம்பிக்கைகளுமே இணைவைத்தல் என்னும் ஷிர்க்கின் வகையைச் சேர்ந்ததாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: –

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)

மேலும் நம் இதயங்களில் உள்ள இரகசியங்களை, (தேவைகளை, எணணங்களை) அறிபவன் அல்லாஹ் மட்டுமே என்று திருக்குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் கூறுகிறான். பார்க்கவும்  – 11:5, 11:31, 29:10, 48:18, 67:13, 28:69, 28:69, 2:284, 3:29, 14:38

இணைவைத்தல் என்னும் கொடிய பாவத்தைத் தவிர மற்ற பாவங்களை தான் நாடியவருக்கு மன்னிப்பேன் என்று அல்லாஹ் கூறியிருப்பதால் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இணைவைத்தலின் சாயல் கூட நம் வாழ்வில் ஏற்படாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே நம் இதயங்களின் இரகசியங்களை அறியக்கூடியவனான அல்லாஹ்விடமே நம் தேவைகளைக் கூறி பிரார்த்திக்க அல்லாஹ் கிருபை செய்வானாகவும்.

 

thanks :புர்ஹான்
சவூதி அரேபியா

Posted in Uncategorized | Leave a comment